அக்ஷய திருதியை
26.04.2020 ஞாயிறு அக்ஷய திருதியை.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு மூன்றாவது நாள் வரும் திருதியை அக்ஷய திருதியை எனப்படும். இந்த நாளில் தான் பகவான் குபேரனுக்கு செல்வத்தை கொடுத்து செல்வத்தின் அதிபதி ஆக்கினார்.\
இந்த நாளில் தான் ஶ்ரீகிருஷ்ணரை குசேலர் சந்தித்தார். அன்று தான் அவர் கொணர்ந்த அவலை எடுத்து அக்ஷய என்று சொல்லி வாயில் போட்டுக் கொண்டார்.
குசேலர் பெருஞ்செல்வநதரானது அக்ஷய திருதியை அன்று தான். அக்ஷய என்ற சொல்லிற்கு வளருதல் அல்லது பெருகுதல் என்று பொருள்.
அதனால் தான் அரிசி வாங்கி வந்து பானையில் போடும்போது முதலில் அக்ஷயம் அக்ஷயம் என்று சொல்லி போடவேண்டும் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள்.
அக்ஷய திருதியை அன்று கிருஷ்ணர் படத்திற்கு மலர் வைத்து தயிர் சாதம் நைவேத்தியம் செய்தல் வேண்டும்.
சென்ற ஆண்டு தண்ணீர் கஷ்டம் நீங்க வேண்டி ஒரு குடத்திலோ அல்லது சொம்பிலோ நீர் நிரப்பி வழிபாடு செய்தோம். இந்த ஆண்டு தண்ணீர் கஷ்டம் இல்லை. அதுபோல இந்த ஆண்டும் அனைவரும் ஒரு குடத்திலோ அல்லது சொம்பிலோ தண்ணீர் வைத்து வழிபாடு செய்தால் வரும் ஆண்டுகளில் தண்ணீர் கஷ்டம் இன்றி வாழலாம். தங்கம் வெள்ளி வாங்க வேண்டும் என்று வதந்தி கிளப்பி வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்ட கதையை நாம் அறிவோம். அன்று உப்பு வாங்குவது நல்லது. குரு சுக்கிரன் ஆதிக்கம் செலுத்தும் நாளாகையால் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பொருள்களை வாங்கலாம்.
அன்று தான தர்மம் செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம்.
முடிந்தால் ஐந்து பேருக்கு தயிர் சாதம் வழங்குவது நல்லது. இந்த நாளில்
அன்னதானம் செய்வது பாவங்களைப் போக்கி நன்மை விளைவிக்கும்.
அக்ஷய திருதியை அன்று அனைவரிடமும் அன்புடன் இருப்போம் அன்னதானம் செய்வோம்.
நிர்மலா ராஜவேல்
Comments