சம (ய) ம்
இன்றைய இலக்கிய பக்கத்தில்
கவிதை
சம (ய) ம்
பசி வந்த பின்
பற்றும்
மறந்து போகிறது.
கை கூப்பதும்
கை ஏந்துவதும்
தக்க வைத்துக்கொள்ளும்
தன்மானச் செய்கை!
அறிவுக்கு சில சமயம்
அறிதலுக்கு பல சமயம்
நம்பிக்கையோடு
கைகள் குவிகின்றன …
கை குவிப்புக்கு முன்
நீ இருந்தால் வணங்கு…
நீதி இருந்தால் இணங்கு.
சமம் என்பது--
சமயோசிதமல்ல-
சரி சமமானது!
---ராசி அழகப்பன்
Comments