வேலையில்லா திண்டாட்டம்; 3.33 கோடி அமெரிக்கர்கள் தவிப்பு

வேலையில்லா திண்டாட்டம்; 3.33 கோடி அமெரிக்கர்கள் தவிப்பு


 


வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 38.42 லட்சத்தை கடந்துள்ளது. அதில், 12.9 பேர் அமெரிக்கர்கள். பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை, 2.70 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதில், 76,537 பேர் அமெரிக்கர்கள் எனத் தெரியவந்துள்ளது.


 


கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை, 3.33 கோடியாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவில் பணிபுரிவோரின் எண்ணிக்கையில், 20 சதவீதமாகும்.
வேலையில்லாமல் இருப்போருக்கான நிவாரணம் கோரி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், 69 லட்சம் அமெரிக்கர்கள் விண்ணப்பித்திருந்தனர். மேலும், ஊரடங்கை தளர்த்தி, வேலைவாய்ப்பைத் தரக் கோரி, பல்வேறு இடங்களிலும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், ஊரடங்கால் போக்குவரத்துத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 'ஊபர், ஏர் பி.என்.பி.,' போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மொத்த அமெரிக்க பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 32 லட்சம் அமெரிக்கர்கள், வேலையில்லாமல் இருப்போருக்கான நிவாரணத்தை கோரி விண்ணப்பித்துள்ளனர்.


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 3.5 சதவீதமாக குறைந்திருந்தது. சூழல் மேலும் மோசமடைந்து வருவதால், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், 15 சதவீதத்திற்கும் மேல் இருக்க வாய்ப்புள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி