3.5 டன் தக்காளியை வடமாநில தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரி
திருமழிசை மார்க்கெட்டில் கடை கிடைக்காமல் அதிர்ச்சி அடைந்த சில்லறை வியாபாரி 3.5 டன் தக்காளியை வடமாநில தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கினார்.
சென்னை முகப்பேரை சேர்ந்த சரவணகுமார்( வயது 41 )இவர் கோயம்பேட்டில் 300 சதுர அடியில் தக்காளி கடை நடத்தி வருகிறார்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றபட்டதை தொடர்ந்து திருமழிசையில் மொத்த வியாபார கடையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது ஆனாலும் வியாபாரம் செய்து வந்த பலருக்கு கடை கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவரான சரவணகுமார் தனக்கு கடை கிடைக்காத அதிர்ச்சியால் வாங்கி வைத்திருந்த ரூ 35 ஆயிரம் மதிப்புள்ள 3500 கிலோ தக்காளியை வெளியே வீச வாகனத்தில் கொண்டு சென்றார். அப்போது அவரிடம் நண்பர்கள் நீங்க தக்காளி வீணாக வெளியே வீசுவதை விட ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவலாம் என அறிவுறுத்தவும் அவர் மனம் மாறி அம்பத்தூர் தொழில்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயராகவன் அவர்களிடம் 3.5 டன் தக்காளியை ஒப்படைத்தார் அந்த தக்காளியை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனால் மிகவும் மனநிறைவுடன் சரவணகுமார் இன்ஸ்பெக்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
அவருக்கு நமது வாழ்த்துக்கள்
Comments