பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு குழு
பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு குழு
மே 09, 2020 15:48
தமிழக அரசு
சென்னை:
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெஃப் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை மூன்று மாத காலத்திற்குள் தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments