70 கி. மீ.,  நடந்து சென்ற பின் ரோட்டில் குழந்தை பெற்ற பெண்

70 கி. மீ.,  நடந்து சென்ற பின் ரோட்டில் குழந்தை பெற்ற பெண்


பர்வானி: மஹாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பிய கர்ப்பிணி ஒருவர் 70 கி.மீ., தூரம் நடந்து சென்ற நிலையில், குழந்தை பிறந்தது. பின்னர் 164 கி.மீ., தூரம் நடந்து சென்றார். அவரை மீட்ட போலீசார் கார் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

ம.பி., மாநிலம் சத்னா மாவட்டம் உச்சாரா கிராமத்தை சேர்ந்த ராகேஷ் கவுல். மனைவி சகுந்தலா. 9 மாத கர்ப்பிணி. இவர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தனர். கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால், வேலை இழந்த அவர்கள் சாப்பிட கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டனர். இதனால், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்த சொந்த ஊருக்கு கிளம்பினர். நாசிக்கில் இருந்து அவர்களது ஊர் 1,000 கி.மீ., தூரத்தில் இருந்தது. நாசிக்கில் இருந்து கிளம்பிய 70 கி.மீ., தூரம் நடந்து சென்ற நிலையில், பிம்பால்கோவான் என்ற இடத்தில் சகுந்தலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.


உடன் வந்த பெண்கள் இணைந்து, அவருக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்தனர் 


சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், குழந்தையுடன், சகுந்தலாவும் சொந்த ஊருக்கு நடக்க துவங்கினார். அவ்வாறு, 164 கி.மீ., நடந்து சென்று, மஹாராஷ்டிரா - ம.பி., மாநில எல்லையில் உள்ள பிஜாசன் நகரை அடைந்தனர். கைக்குழந்தையுடன் சகுந்தலாவை நடந்து வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் நடந்ததை கேட்டறிந்த போலீசார், உணவு, தண்ணீர் வழங்கினர். பின்னர் வாகனம் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி