கொரோனா முடிவுக்கு வந்ததும் உலகில் பஞ்சம் ஏற்படும் -

கொரோனா முடிவுக்கு வந்ததும் உலகில் பஞ்சம் ஏற்படும் - ஐ.நா. சபை எச்சரிக்கை


கொரோனா முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு, 26 கோடி மக்கள் பசிபட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.


 


உலக உணவு திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி கூறியதாவது:-


கொரோனா முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். இந்த ஆண்டு இறுதியில் இதன் நிலைமை மோசமாகும். 26 கோடி மக்கள் பசி, பட்டினி நிலைக்கு

தள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

முதலில் அதை தடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இதை சரி செய்வதற்கு பணக்கார நாடுகளும், பணக்காரரும், பண வசதி கொண்ட நிறுவனங்களும் தாராளமாக உதவ வேண்டும். வினியோக சங்கிலி
அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


 


 


 


இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பின் தலைவர் மார்க் லோகாக் இதுபற்றி கூறியதாவது:-

கொரோனா தொற்றின் உச்சம் இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்கு நீடிக்கலாம். அப்போது ஏழ்மையான நாடுகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகும். ஏற்கனவே கொரோனாவால் மக்களுக்கு வருமானம் இல்லை.

வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. உற்பத்தியும் இல்லை. ஏற்றுமதி வருவாய், பணம் அனுப்புதல், சுற்றுலா ஆகியவை முடங்கிவிட்டன.சுகாதார அமைப்புகளும் அழுத்தத்தில் இருக்கின்றன. இதுபோன்ற

பிரச்சினைகளால் மக்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

பசி, பஞ்சம், வறுமை, நோய் அதிகரிப்பு போன்றவை ஏற்படும். சாலை போக்குவரத்து தடைகளால் பொருளாதார மந்த நிலை இன்னும் மோசமாகும். இது உலக அளவில் வினியோக சங்கிலியை முறித்துவிடும்.

பசி, பட்டினி போன்றவற்றால் மக்களிடையே மோதல் ஏற்பட்டு அது கொந்தளிப்புகளையும் உருவாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அது கட்டுப்படுத்த முடியாத நிலைக்கும் செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி