இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஆவடி கௌரிபேட்டையில் உள்ள ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி
ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி.
04.05.2020 அன்று இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஆவடி கௌரிபேட்டையில் உள்ள ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது.
ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் இப்பகுதி மக்கள் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த ஏழை மக்களின் வறுமையை கருத்தில் கொண்டு, இனிய உதயம் தொண்டு நிறுவனம் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி ஆவடி தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர், விஏஓ முன்னிலையில் ரூபாய் ஆயிரத்தி ஐநூறு மதிப்புள்ள, 10 நாட்களுக்கு தேவையான அளவு 60 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது அனைவருக்கும் முக கவசம் கொடுத்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கப்பட்டது
குழந்தைகளுக்கு பிஸ்கட்,குளிர்பானம் மற்றும் சாக்லேட் ஆவடி தாசில்தார் வழங்கி குழந்தைகளிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா, திட்ட அலுவலர் ஹரிஷ் குமார், திரு அல்லாபகேஷ்,ரோஹித் மற்றும் அப்பகுதி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். கூன்ஜ் நிறுவனத்தின் உதவியுடன் இந்த நிவாரணம் வழங்கப்பட்டது.
தகவல் அல்லபக்ஷ்
Comments