தனது பெயரை கெடுக்கும் வகையில் தவறான பதிவுகளை வெளியிட்டு அவதூறு பரப்பியவர் மீது திமுக நகர செயலாளர் போலீசில் புகார்.

: திருத்துறைப்பூண்டியில்
பேஸ்புக், வாட்ஸப்பில் தனது பெயரை கெடுக்கும் வகையில் தவறான பதிவுகளை வெளியிட்டு அவதூறு பரப்பியவர் மீது திமுக நகர செயலாளர் போலீசில் புகார்.
திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் வசித்து வருபவர் பாண்டியன் திமுக நகர செயலாளர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் இவர்மீது அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் பேஸ்புக், வாட்ஸப்பில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெட்டப்பட்டதற்கு திமுக நகர செயலாளர் பாண்டியன்தான் காரணம் என்றும் திமுக சார்பில் வழங்கிய நிவாரண பொருட்களில் முறைகேடு நடந்திருப்பதாக தவறான பதிவை வெளியிட்டு எனது நற்பெயருக்குகளங்கம் ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்துறைப்பூண்டிபோலீசில் புகார் தெரிவித்தார் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்


 


 


.செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி