'பேனா மன்னன்


 




'பேனா மன்னன்'  டி. எஸ். சொக்கலிங்கம்


'பேனா மன்னன்என்று அழைக்கப்பட்டஇந்திய விடுதலைப் போராள காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்ற  இதழியலாளரும்எழுத்தாளருமான  டி. எஸ். சொக்கலிங்கம் 


திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள  தென்காசியில் சங்கரலிங்கம் பிள்ளை - லெட்சுமியம்மாள்  தம்பதியருக்கு 1899  மே 3-ல் பிறந்தார்.  "மடத்துக்கடை" என்ற புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியை நடத்தி வந்த  சொக்கலிங்கத்தின் தந்தை  மறைவுக்குப் பிறகு சொக்கலிங்கத்தின் சகோதரர் சிதம்பரம் பிள்ளை அங்காடியை நடத்தி வந்தார்.  ஆஷ்  கொலை வழக்கில்,  சிதம்பரம் பிள்ளையைத் தொடர்புபடுத்தி அவரைக் கைது செய்தனர். குடும்பத்தினர் நடத்தி வந்த "மடத்துக்கடை"  மேற்பார்வை பொறுப்பை சொக்கலிங்கம் ஏற்றார். இதனால் அவர் கல்வி தடைபட்டது.


காந்தியத்தில்  தீவிர        பற்றுக்கொண்ட சொக்கலிங்கம்,              1920களில்   தனது 21ஆவது  வயதில்  இதழியல்  துறையில் காலடி வைத்தார். சேலம்  வரதராஜூலு  தொடங்கி நடத்திவந்த "தமிழ்நாடு"  இதழில் இவர் முதன் முதலில் பணியாற்றினார்.  பிறகு,  வ.ரா,  சீனிவாசன்  ஆகியோரோடு இணைந்து   மணிக்கொடி  இதழைத் தொடங்கினார்.


'காந்தி'  என்ற வாரம்  இருமுறை  இதழைத்  தொடங்கினார்.


பின்னர்சதானந்த் தொடங்கிய  தினமணி  இதழின் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.


'இந்தியாவில்  வசிக்கும்  ஒவ்வொரு  தமிழரும்  தன்னைத்  தமிழர்  என்று பெருமையுடன்  கூறிக்கொள்ள  வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் - தமிழ்நாட்டில் பிறந்ததமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்டஇந்து,  முஸ்லீம்,  கிறித்தவர்கள்  மற்றும்  தமிழ்பேசும்  அனைவரும்தான்'  என்று  தினமணியின்  முதல்  தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இவர்  தினமணி  ஆசிரியராக இருந்தபோது,  ஏ.என்.சிவராமன்,  புதுமைப்பித்தன்,  சி.சு.செல்லப்பா,  கு.அழகிரிசாமி உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர்.


தினமணி பின்னர்கோயங்கா குழுமத்துக்கு கைமாறியது. 


1943 இல்தினமணியில்  இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம். புதுமைப்பித்தன்சி.சு.செல்லப்பாகு.அழகிரிசாமி ஆகியோரும் அப்போது வெளியேறினர்.


சொக்கலிங்கத்துக்கு பின்னர் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு அவரின் நெருங்கிய நண்பரான ஏ.என்.சிவராமன் வந்தார். தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம்இக்கட்டான ஒரு நேரத்தில் மீண்டும் தினமணியில் ஒரு பணிக்கு வர நேர்ந்தது. அதற்குக் காரணமாக இருந்ததும் ஏ.என்.சிவராமனே. அந்தச் சூழலில் தினமணி நிர்வாகம் சொக்கலிங்கத்துக்கு நிர்வாகத்தில் ஒரு பணியை அளித்தது குறிப்பிடத்தக்கது.


1944 இல் தினசரி என்ற நாளிதழைத் தொடங்கினார். சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்  பிடிக்கமுடியாமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம்,  ஜனயுகம்,  பாரதம்,  நவசக்தி  உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.


புதுமைப்பித்தன் என்ற எழுத்தாளன் தமிழ்  இலக்கிய உலகுக்குக் கிடைக்க காரணமாக இருந்தவர் சொக்கலிங்கம்.  தினமணி,  மணிக்கொடி,  காந்தி உள்ளிட்டதான் பணியாற்றிய அத்தனை இதழ்களிலும் புதுமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்தார்.


சிறந்த இதழியலாளர் மட்டுமல்லசொக்கலிங்கம் சிறந்த படைப்பிலக்கியவாதியும்கூட. லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான  போரும் அமைதியும்  என்ற  நாவலை தமிழாக்கம் செய்தார். இது தவிரசிறுகதைநாவல்கவிதை என இலக்கியத்தின் அத்தனை துறைகலும் சிறப்பான பங்கினை நல்கியுள்ளார் சொக்கலிங்கம்.


அவரது பிறந்த நாளான இன்று அவர் செய்த தொண்டுகளை நினைவுகூர்வோம்.  


செ ஏ துரைபாண்டியன்





 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி