திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய நபரை கைது செய்ய வலியுறுத்தி நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய நபரை கைது செய்ய வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் இவரை திருத்துறைப்பூண்டி ராமர் மடத்தெருவை சேர்ந்த பாமக நகர செயலாளர் கல்விபிரியன்  பழைய பேருந்துநிலையம் அருகில் இறால் மீன் வியாபாரம் செய்துவந்தார் இந்த நிலையில் மீன் வியாபாரிகள் மார்க்கெட் பகுதியில் மட்டுமே மீன் வியாபாரம்செய்ய உத்தரவிட்டது. அதற்கு சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம்தான் என்று கூறி நேற்று மதியம் வீட்டிற்கு சென்றபோது அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார் படுகாயம் அடைந்தவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து புகார் அளித்தும் சுகாதார ஆய்வாளரை வெட்டிய கல்விபிரியனை போலீசார் கைது செய்யாததை கண்டித்தும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், களப்பணியார்கள், கொரோனா தடுப்பு பணியாளர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,