சுத்தம் செய்தவைகள் செய்ததாகவே இருக்கட்டும் !
சுத்தம் செய்தவைகள் செய்ததாகவே இருக்கட்டும் !
கோவிட் 19 ஊரடங்கு நேரத்தில் ...
இளைஞர்களும் தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்தனர்.மருத்துவர்களும் செவிலியர்களும் கடவுளாகவே மாறிப் போயினர்.காவலர்கள் எல்லைச்சாமி ஆகவே நம்மை காத்தனர்.
தூய்மைப் பணியாளர்கள் ஒரு தாய் தன் பிள்ளையிடம் எப்படி அசுத்தம் பார்ப்பது இல்லையோ அதை போல் நம்மை சுத்தமாக வைத்திருக்க பாடுபட்டனர்.
ஆளும் கட்சி எதிர்க்கட்சி சிறு சிறு கட்சிகள் மற்றும் பெயரே வைக்காத கட்சிகளும் பல வகையில் மக்களுக்கு உதவின.
இவர்களுக்கு எல்லாம் நாம் நன்றி சொல்ல வேண்டாமா?எப்படி சொல்வது?
பொது இடங்களை சுத்தமாக வைத்திருங்கள்.
முகம் தெரியாத அக்கம்பக்கத்தினரிடம் மனம்விட்டுப் பேசியதை தொடருங்கள்.
குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவிடுங்கள்.
விட்டுப் போன உறவுகளை தொலைபேசி மூலம் விசாரித்ததை சிறுகதை ஆக்காமல் தொடர்கதை ஆக்குங்கள்.
பிறருக்காக பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள்.
வீட்டு உணவிற்கும் பாட்டி மருந்துக்கும் பழகிய குழந்தைகளை அப்படியே பழக்கி விடுங்கள். மாறியவர்கள் மாறியவர்கள் ஆகவே இருக்கட்டும் .
உள்ளும் புறமும் சுத்தம் செய்தவை செய்தவைகள் ஆகவே இருக்கட்டும்.
சுத்தம் செய்தவைகள் செய்ததாகவே இருக்கட்டும் !
Dr.Vijayalakshmi Sridhar
Founder - Director of DISA ACADEMY.
Educationalist / Social Activist /
Motivational speaker.
Comments