தமிழால் எழுத்தின் தலைமகன்.
சுஜாதா
பிறந்த தினம்
**
எழுசீர்
கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
**
1. எழுத்துப்
பணியை
இதயப்
பணியாய்
ஏற்றே
வாழ்ந்த
இனியவன்
எழுத்தில்
பலவாய்
எழுச்சி
அமைத்தே
நாட்டில்
சேர்த்த
நவரசன்
அழுத்தம்
நிறைத்தே
அறிவி
யலைத்தன்
ஏட்டில்
பதித்த
அரியவன்
பழுத்த
பழமாய்
படிப்போர்
சுவைக்க
பாதை
அமைத்த
பாவலன்.
2. நடிக்கும்
திறத்தில்
நடத்தும்
கதையை
வடித்துக்
கொடுத்த
வானவன்
அடிக்கும்
புதுமை
அலையில்
தினமும்
குளித்து
மகிழ்ந்த
கோமகன்
துடிக்கும்
இதயத்
துடிப்பில்
தமிழை
நிறுத்தி
வளர்த்த
நேர்மையன்
வடிக்கும்
படைப்பை
வகுக்கும்
திறத்தில்
படைக்கும்
பிரம்மப்
பாவலன்.
3. கன்னி
மொழியும்
கணிணி
மொழியும்
கருத்ததில்
நிரப்பிக்
கொடுத்தவன்
அன்னைத்
தமிழும்
அருமை
பெறவே
அறிவியல்
தமிழை
வடித்தவன்
தன்னை
நினைத்தே
தரமாய்
பலவாய்
கதைகளை
எழுதிக்
குவித்தவன்
இன்று
பிறந்த
இனிய
சுஜாதா
தமிழால்
எழுத்தின்
தலைமகன்.
**
ச.பொன்மணி
Comments