திருவள்ளுவர் அன்றே எழுதி வைத்தார்

முழு கவச உடையால் அணிவகுக்கும் அவஸ்தைகள்: மருத்துவ பணியாளரின் நெகிழ்ச்சி அனுபவம்


 


.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்


சொல்லிய வண்ணம் செயல்  என்றார் 


திருவள்ளுவர்.


இந்தத் திருக்குறள் பொருளை தெளிவாகத் தெரிவிக்கிறது.  எனினும், பொதுவான உரையை மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.


இதை செய்யலாம் என்று சொல்வது  எவருக்கும் எளிமையானது.  ஆனால் அப்படி சொல்லியவாறு தாம் செய்யும்போதுதான் அது எவ்வளவு கடினமானது என்பது எல்லோர்க்கும் தெரியும்


இதற்கு நவீன எடுத்துக்கொட்டு ஒன்றுதான் கீழே கொடுக்கப்பட்டுள்ள உண்மை நிகழ்வுகள்.   


 


  கொரோனா வார்டில், முழு கவச உடையுடன் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள், பணியின் போதும், பணி முடிந்த பின்னும், ஏராளமான அவஸ்தைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. அவற்றை புறந்தள்ளியபடி அவர்கள், நோயாளிகளுக்கு தொய்வில்லாமல் சிகிச்சை அளிக்கும் மிகப் பெரிய சேவை செய்து வருகின்றனர்.



கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்


மனநிலை மாற்றம்


 


ஃ     இவர்களுக்கு, பெரும் சவாலாக இருப்பது, அவர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடை தான். காற்று கூட நுழைய முடியாத இந்த ஆடையை அணிந்து, ஆறு முதல் எட்டு மணி நேரம், இயற்கை உபாதை களை அடக்கியபடி பணியாற்றுகின்றனர்.பணி முடித்த பின், அந்த உடையை கழற்றி, இயல்பு நிலைக்கு திரும்பும் போது, அவர்கள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதுடன், மன நிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.






தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஒரு செவிலியல் (32 வயது)  நாளிதழுக்கு அளித்த பேட்டி: கொரோனா வார்டில், ஒரு பணியாளர், ஏழு மணி நேரம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். வார்டுக்கு செல்லும் முன், 'வாட்ச், செயின்' போன்ற வற்றை கழற்றி விட்டு, அறுவை சிகிச்சை அரங்கிற்கான ஆடையை முதலில் அணிய வேண்டும்.


முக கவசம்





அடுத்து, கொரோனா வார்டுக்கான பிரத்யேக காலணி, கையுறை, கழுத்தையும், தலையையும் மறைப்பது போன்ற தொப்பி போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.பின், பி.பி.இ., பையில் உள்ள சட்டை, பேன்ட், கால்களை மறைக்கும் கவர், முக கவசம், கண்களை பாதுகாக்கும் கண்ணாடி ஆகியவற்றை அணிய வேண்டும். பாதுகாப்புக்காக அணிந்திருக்கும் கண்ணாடிக்கு மேல் இருக்குமாறு, 'ஷீட்' உள்ள தலையை மறைக்கும் வகையிலான கவர் அணிய வேண்டும்.


 





மூன்றடுக்கு கவச உடைகளை அணிந்து தான், பணியைத் துவங்க வேண்டும். கவச உடைகளை அணிவதற்கே, 30 நிமிடங்கள் ஆகும். அதற்கு முன்னதாகவே, சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கழிப்பறைக்கு சென்று வருவது போன்ற அனைத்தையும் முடித்து விட வேண்டும்.


 



மூன்றடுக்கு உடை


 


 


கோடைக் காலம் என்பதால் வியர்த்தபடியே இருக்கும். வியர்வையை கையால் தொடக் கூடாது; உடைக்குள் வழிந்தபடி இருக்கும். பணி முடியும் வரை, தண்ணீர் குடிக்காமலும், கழிப்பறைக்கு செல்லாமலும் கட்டுப்படுத்திக் கொள்வோம். பணி முடிந்ததும், உடை மாற்றும் அறைக்கு சென்று, கையுறை மீது, சானிடைசர் போடுவோம். பின், பி.பி.இ., மூன்றடுக்கு உடைகளை ஒவ்வொன்றாக களைய வேண்டும். களைந்த ஆடைகளை, குப்பைத் தொட்டியில் போட்ட பின், மீண்டும் சானிடைசர் போட்டு, கைகளை சுத்தம் செய்வோம்.இறுதியாக, அறுவை சிகிச்சை அரங்கிற்கான உடையையும் நீக்கி விட்டு, எங்கள் உடையை அணிந்து கொள்வோம். பின், மருத்துவமனையில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று, பல் துலக்கி, ஷாம்பூ போட்டு நன்றாக குளிக்க வேண்டும்.


 


அப்போது, எங்கள் கை, கால்களில் தோல் முழுதும் சுருங்கி, முதியவர்களின் உடல் போல் மாறியிருக்கும். இவற்றை கடந்து, எங்கள் குடும்பத்தினரோடு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, பல நாட்களாகும்.முழுமையான அர்ப்பணிப்போடு பணியாற்றும் எங்களை போன்றவர்களுக்காக, அரசின் அறிவுரைகளை, பொதுமக்கள் முறையாக கடைப்பிடித்து, கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி