வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்

இலக்கிய சோலையிலே இளைப்பாறுங்கள்  பகுதி 5


 


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா  


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..




பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..

படம் : நான் பெற்ற செல்வம்
இசை : ஜி. ராமனாதன்
பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன்
பாடலாசிரியர்: கா.மு.செரிப்
வருடம்: 1956


சுமார் 64 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பெற்ற பாடல் இப்பொழுதும் பொருத்தமாக இருப்பதுதான் இப்பாடலின் சிறப்பு. கொரோனா நோய்த் தொற்றை மறந்து இப்பாடலை இரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நினைவுபடுத்தும்  


(* இலக்கிய சோலையிலே இளைப்பாறுங்கள்  பகுதி 5)


செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி