: திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு டாஃபே டிராக்டர் கம்பெனி மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக உழவு செய்யும் பணி
: திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு டாஃபே டிராக்டர் கம்பெனி மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக உழவு செய்யும் பணியை வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் துவக்கிவைத்தார்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தெரிவித்ததாவது:
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார விவசாயிகள் தற்போது வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் ஐந்து ஏக்கர் சாகுபடி பரப்புக்கு உட்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது நிலத்தினை இலவசமாக உழவு செய்தி வேளாண்துறை மற்றும் டாஃபே டிராக்டர் நிறுவனமும் இணைந்து விவசாயிகள் பயனடையும்
வகையில் கட்டணமில்லாமல் உழவு செய்து தரும் பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஐந்து ஏக்கர் நிலமுடைய விவசாயிகள் மட்டும்
ஆன்லைனில் ஜே பார்ம் சர்வீஸ் ஆப் டவுன்லோடு செய்து ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே இந்த இலவச உழவு பயனை பெறமுடியும் அப்படி பதிவு செய்த விவசாயிகளுக்கு டாஃபே டிராக்டர் கம்பெனி நிர்வாகிகள் பதிவு செய்த விவசாயிகளுக்கு டிராக்டருடன் வந்து உழவு செய்து கொடுப்பார்கள் அதேபோல் பதிவு செய்த விளக்குடி விவசாயி செல்வராஜ் நிலத்தில் உழவு பணி துவக்கப்பட்டுள்ளது விவசாயிகள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
செய்தியாளர். பாலா. படங்கள். மு. அமிர்தலிங்கம்
Comments