இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சார்பாக வீராபுரம் மோரே பஞ்சாயத்தில் மக்களுக்கு நல உதவி

              நேற்று   (02.05.2020) இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சார்பாக வீராபுரம் மோரே பஞ்சாயத்தில் ஜெ.ஜெ.நகரில்  Danirasa Foundation நிறுவனத்தின் உதவியுடன், இனியஉதயம் தொண்டுநிறுவனம் தமிழக அரசு வழிக்கட்டுதலின் படி, ஆவடி தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் முன்னிலையில் ரூபாய் 1500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 10 நாட்களுக்கு தேவையான வழங்கப்பட்டது.அனைவருக்கு முககவசம் கொடுத்து தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.


         இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் திருமதி,கோமளா அவர்கள் 144 சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதலிருந்து இன்று வரை மிகச்சிறப்பாக சேவையாற்றி வருகிறார். பொது மக்களுக்கு தேவையான தேவைகள் பூர்த்தி செய்துவருகிறார்.


           இந்தநிகழ்வின்போது Danirasa Foundation-ன் திரு.தன்ராஜ்  இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் ஆசிரியர் சாமுண்டீஸ்வரி மற்றும் அப்பகுதியில்  தன்னார்வலர்கள்,வெங்கடேசன்,பாலமுருகன்,இளமாறன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.



        இன்னும் நிறைய மக்கள் உதவி இன்றி  தவித்து வருகிறார்கள்.நீங்கள் நினைத்தால் அவர்களின் வறுமையை  போக்கி அவர்களிடத்தில் மகிழ்ச்சியை காணலாம் என்று கூறி சமூகத்தை அழைத்தார் திருமதி கோமளா அவர்கள்.


 


தகவல் திரு அல்லபக்ஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி