நன்றி நன்றி நன்றி
கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற தங்களுடைய உயிரையும் துச்சமாக மதித்து, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக, பாடுபட்ட, சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள், காவல் துறையினர், வருயாய்த் துறையினர், உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் எளிய முறையில், ஆனால் மனமுவந்து நன்றி தெரிவிப்பதற்காக, மருத்துவ மனைகள் மேல் பூக்கள் தூவுதல், இராணுவ இசை இசைத்தல், மாலை கடற்படை ஓரத்தில் இராணுவ அணிவகுப்பு நடத்துதல், போர்க்கப்பல்களில் விளக்குகள் ஏற்றுதல், ஓசை எழுப்புதல் போன்ற பல்வேறு வகையில் உளமார்ந்த நன்றி செலுத்திய பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் இந்த இணையதள உரிமையாளர்களும், பணியாளர்களும் எழுத்தாளர்களும் படித்த வாசகர்களும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொறுப்பிலுள்ளவர்கள் இந்த நேரத்தில் பாதுகாப்புப் படையினரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குறை ஒரு பகுதி மக்கள் மனதில் உள்ளது. எல்லா துயர நேரங்களிலும் அவர்களது பணியினைப் பயன்படுத்திக் கொண்டவர்கள், இப்பொழுது ஏன் பயன்படுத்திக்கொள்ள வில்லை என்பது விடையளிக்கமுடியாத ஒரு கேள்வி.
குறைந்தபட்சம், ஊரடங்கு அறிவித்த அடுத்த நாளே, ஒவ்வொரு மாநிலத்திலும் பணிபுரிந்து வந்து மற்றைய பகுதி மக்களை அவரவர்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல, இராணுவ வாகனங்கள் பயன்படுத்தி, ஓரிரு நாட்களில் பிரச்னைகளைத் தீர்த்திருக்கலாம். இப்பொழுதும் அதை செய்யவில்லை.
இந்த நிலையிலும், இராணுவம் உரிய வகையில் தங்கள் நன்றிக் கடனை செலுத்தியிருப்பதற்கு மீண்டும் ஒருமுறை எங்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொறுப்பிலுள்ள அனைவரும் இந்த நன்றியினை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
செஏ துரைபாண்டியன்
Comments