திருத்துறைப்பூண்டி பகுதியில் முழுவீச்சில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ராஜேஷ்லக்கானி நேரில் ஆய்வு
திருத்துறைப்பூண்டி பகுதியில் முழுவீச்சில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ராஜேஷ்லக்கானி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் தூர்வாருதல் மற்றும் குடிமராமத்து திட்டப்பணிகளை பார்வையிட தமிழக அரசால் திருவாரூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியும் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர் ராஜேஸ்லக்கானி ஆய்வு மேற்கொண்டார்.
திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பள்ளங்கோவில் பகுதியிலுள்ள முள்ளியாறு ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும் திருக்களார் கிராமத்தில் அழகிரிகோட்டகம் பாசன வாய்க்கால் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் நாச்சிக்குளம் கிராமத்தில் எல்லை வாய்க்கால் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும் பாண்டி கிராமத்தில் ஓவரூர்
வடிகால் வாய்க்கால் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்றுவரும் தூர்வாருதல் மற்றும்
குடிமராமத்துபணிகளை பார்வையிட்டார். தூர்வாரும் பணியை முழுவீச்சில் முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆனந்த், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ஜெகதீசன் வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் முருகவேல் உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி. மு. அமிர்தலிங்கம்
Comments