புலம்பும் செய்தித்தாள் நிறுவனங்கள்

நெருக்கடியில் செய்தித்தாள் நிறுவனங்கள்; ஸ்டாலின், வைகோவிடம் வலியுறுத்தல்



 


சென்னை; 'கொரோனா'வால் செய்தித்தாள் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமருக்கு, எம்.பி.,க்கள் வாயிலாக அழுத்தம் தருமாறு, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் மற்றும் ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை, செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் இன்று (மே.19ம் தேதி ) நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.


                                                                                                                                 
'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளரும் ஐ.என்.எஸ்., துணைத் தலைவருமான இல. ஆதிமூலம், 'தி இந்து' பதிப்பக குழும இயக்குனர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் , தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து, செய்தித்தாள் நிறுவனங்களின் நெருக்கடிக்கு தீர்வு காண, கட்சி எம்.பி.,க்கள் வாயிலாக, பிரதமருக்கு அழுத்தம் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.


 


 


இதே கோரிக்கை தொடர்பாக, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோரை, செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்


செஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி