"எண்ணங்களை உணர்தல்"
"எண்ணங்களை உணர்தல்"
உயர்ந்த எண்ணங்கள் வலிமையைக் கொடுக்கிறது என்கிறார்கள்.உயர்ந்த எண்ணங்கள் என்றால் என்ன என்பதே பலருக்கு கேள்விக்குறியாக உள்ளது...
உடல் வலிமையோ பண வலிமையோ உயர்ந்த எண்ணங்களை தருவதில்லை முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.மனவலிமை மட்டுமே உயர்ந்த எண்ணங்களை தரும்.மனதை எவ்வாறு வலிமை படுத்த வேண்டுமென்றால் உயர்ந்த எண்ணங்களை அதாவது நேர்மறையான எண்ணங்களை எண்ண வேண்டும்.எதிர்மறை சிந்தனை வரும் போதெல்லாம் மனதை சற்று நிதானப்படுத்தி பார்த்தால் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் மன உளைச்சல்கள் வீண் கோபம் எவ்வளவு ஆபத்தானது என்பது புரிய வரும்.
ஒரு உண்மையென்னவென்றால் நேர்மறையான எண்ணங்கள் வார்த்தைகள் நம் வாழ்வில் பிரச்சினைகளை குறைக்க கூடிய சக்தி வாய்ந்தவை.
உங்களைச் சுற்றி எப்போதும் நேர்மறை சிந்தனை உள்ள நபர்களை வைத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் எதிர்மறை எண்ணம் உள்ளவர்களிடம் உங்களது நட்பு நீடிக்குமாயின் நாளடைவில் அவர்களின் குணாதிசயங்கள் உங்ளையும் பின் தொடரும்.
மகாத்மா காந்தி அவர்கள் சிறைச்சாலையில் இருக்கும் தருவாயில் தன் கையால் செய்த "லெதர் சூ" ஒன்றை சிறையிலிருந்து வெளி வரும் போது ஜெயிலருக்கு அன்பளிப்பாக அளித்தார்.அப்போது அந்த ஜெயிலர் தான் செய்த தவறுகளை எண்ணி வருந்தினார்.அன்றைய நாளிலிருந்து ஜெயிலருக்கு மகாத்மா காந்தி அவர்கள் ஹீரோ(Roll model) போல் காட்சியளித்தார்.அதாவது நம் எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால் எதிர்மறை சிந்தனை உள்ளவர்களையும் நல்வழிப்படுத்த முடியும்.நாம் நம்மை விட பெரியோர் சிறியோர் அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக திகழ முடியும்.
எப்போதும் உங்களை நேசியுங்கள்.கவலையென்னும் ஒன்றை விட்டுயொழியுங்கள்.யாருக்கு கவலையில்லை என்று உங்களுக்கு நீங்களே ஆறுதல் அளித்து கொண்டு புத்துணர்வோடு இருங்கள்.எதிலும் நம்பிக்கையோடு இருங்கள்.
செய்யும் வேலைகளை பிடித்து செய்யுங்கள்.மன நிறைவு என்பது நாம் செய்யும் வேலைகளை சார்ந்து தான் உள்ளது.நிறைவான எண்ணங்களும் மன அமைதியும் வந்துவிட்டால் போதும் தானாகவே நேர்மறையான எண்ணங்களும் வந்துவிடும்.
ஆகவே,
உணர்தல் என்பது ஒரு கலை.ஒரு சாயங்கால நேரம் உங்களது கவலைகள் சோகங்கள் அனைத்தையும் மறந்து மொட்டை மாடிக்குச் சென்று கண்களை மூடி மூச்சை இழுத்து விடுவதை கவனியுங்கள் எத்தனை அமைதியை தருமென்று.அந்த அமைதி கிடைத்த அடுத்த நிமிடம் உங்களுக்குள் இருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் உங்களை விட்டு நீங்கியது என்று நம்புங்கள் உங்கள் வாழ்க்கை அழகாக மாறிவிடும்.
- கீர்த்தனா
Comments