வாஞ்சிநாதன் வீரவணக்கநாள்

1911 - செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு காலமான😪 நாளின்று.


🎯சுதந்திர போராட்ட காலத்தில் வ.உ.சி. கைது செய்யப்பட்ட போது நெல்லையில் கலவரம் வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்களில் 4 பேரை அப்போதைய ஆங்கிலேய துணை கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக் கொன்றார். அதன்பிறகு கலெக்டரான ஆஷ்துரை, 1911–ம் ஆண்டு ஜூன் 17–ந் தேதி தன்னுடைய குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு ரெயிலில் சென்றார்.
மணியாச்சி ரெயில் நிலையத்தில் ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் கழிவறைக்குள் சென்று அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
வீரவணக்கநாள் நிகழ்ச்சி
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக போராடிய வாஞ்சிநாதன் உயிர் நீத்த நாளான ஜூன் 17–ந் தேதி அவரது நினைவை போற்றும் வகையில் செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்கநாள் நிகழ்ச்சி நடக்கிறது.
அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் 17–ந் தேதியான இன்று செங்கோட்டையில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடக்கிறது. வாஞ்சிநாதன் உயிர்நீத்த நேரமான காலை 10.35 மணிக்கு நகரசபை சங்கு ஒலிக்கப்படும். அப்போது அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள்.அதன்பிறகு வாஞ்சிநாதன் சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்கள், பள்ளிக்கூட மாணவ– மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்கள்


 


தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 109-வது நினைவு நாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தா் தயாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி