ஊரடங்கை மீறியதாக சிங்கப்பூரில் இந்திய மாணவிக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம்

.


ஊரடங்கை மீறியதாக சிங்கப்பூரில் இந்திய மாணவிக்கு


ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம்



 


சிங்கப்பூர்: ஊரடங்கை மீறியதாக சிங்கப்பூரில் இந்திய மாணவிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதியில் இருந்து ஜூன் 2-ம் தேதி வரை சிங்கப்பூரில் ஊரடங்கு அமலில் இருந்தது. அந்த நேரத்தில் 3 இந்திய மாணவர்கள், தாங்கள் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வேறு 7 இந்திய மாணவர்களை அழைத்து வந்து பொழுது போக்கியதாக புகார் எழுந்தது. இந்தச் செயல் ஊரடங்கை மீறிய செயலாகும்.  அந்த 9 மாணவர்களுக்கு ஏற்கனவே தலா ரூ.2 லட்சம்வரை அபராதம் விதிக்கப்பட்டது.


 



இந்நிலையில் இந்திய மாணவி புல்லார் ஜஸ்டீனா (வயது 23) என்பவருக்கு நேற்று சிங்கப்பூர் நீதிமன்றம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. அதே போல் ஊரடங்கின்போது, வெளியே சென்று தன்னுடைய ஆண் நண்பரை சந்தித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டு களுக்காக ரேணுகா ஆறுமுகம் (30) என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி