இலக்கியச் சோலையிலே

இலக்கியச் சோலையிலே   


காதல் வயப்பட்ட கன்னிப் பெண் அந்நேரத்தில் எதை, எதை மறந்து விடுவார் என்பதை எவ்வளவு அழகாக பாடலாசிரியர் எழுதியுள்ளார் பாருங்கள்


 



யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….

என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
என்னை கேட்டேனே

உன்னை நினைத்து என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே

என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே!

என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேனே!

அந்தி மாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்?

ஓஓஓஓஒ!
ஏன் என்னை மறந்தேன்?
நான் என்னை மறந்தேன்.

கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன்
என் குட்டித் தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்?

யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….

பெண் மனம் கவரும் கொற்றர்க்கே!
தாழ் பணிந்தேன்…. தாழ் பணிந்தேன்

படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வறையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னைப்பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக் கட்டி அள்ள மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்?

யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….


 



படம் :  இவன் வேற மாதிரி  டிசம்பர் 13  2013


இசை : சி. சத்யா


பாடலாசிரியர் : நா. முத்துகுமார்


பாடியவர்  :மதுஸ்ரீ 


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி