எல்லாருக்கும் காலம் வரும் ஏ.எல்.ராகவன்
”எல்லாருக்கும் காலம் வரும்”
பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்!
உடல்நலக்குறைவால் இன்று 87 வது வயதில் காலமானார்.
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் பிரபலமாக இருந்த பாடகர்களில் ஒருவரான ஏ.எல்.ராகவன். 1950ம் வருடம் ”கிருஷ்ண விஜயம்” என்ற படத்தின் மூலம் தனது முதல் பாடலை பாடி திரை வாழ்க்கையை தொடங்கினார். திராவிட மொழிகளான் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களுக்கும் பாடியுள்ளார். சுமார் 20 ஆண்டுகள் பல பாடல்களைப் பாடியுள்ளார். சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்த இவர் மனைவி பிரபல நடிகை எம். என். ராஜம் ஆவார். 
பழம்பெரும் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.வி, ராமமூர்த்தி, டி.ஆர்.பாப்பா, சுதர்சனம் மாஸ்டர் உள்ளிட்டோரின் இசையில் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்துள்ளார்.
”எல்லாருக்கும் காலம் வரும்”,
“அன்று ஊமை பெண்ணல்லோ”,
“ஒன்ஸ் அ பாப்பா”
எங்கிருந்தாலும் வாழ்க,
சீட்டுக்கட்டு ராஜா,
என்ன வேகம் நில்லு பாமா,
அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்களால் ரசிகர்களை நன்கு கவர்ந்தவர்.
சமீப காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் இரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாமும் அவர்களுடன் சேர்ந்து அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
அவர் பாடிய
Comments