தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம்
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம்
ஜூன் 04, 2020 12:27
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்து தமிழக அரசுக்கு, இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, லேசான பாதிப்புள்ள நோயாளிக்க 10 நாள் கட்டணமாக ரூ.2,31,820 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பெறும் நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.43 ஆயிரம் வரை வசூலிக்கலாம்.
மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை வசூலிக்கலாம். இவ்வாறு இந்திய மருத்துவ கழகம் பரிந்துரை செய்துள்ளது.
Comments