தனிமையே நீ வா
கவிதை பக்கம்
தனிமையே நீ வா
--------------------------------------
என்னை நானே எடை போட,
எனக்கு நானே சிந்திக்க
தனிமையே வாரோயே நீ!
உலகத்தை நான் அறிய
மாந்தர்களின் இயல்பு
தன்மையை நான்
அலச
தனிமையே
வாரோயே நீ.!!
இறையின்பத்தை உணர
மெளனத்தின் வலிமையை நான் உணர
தனிமையே
வாரோயே நீ!!!
நான் நானாக மாற
எனக்கு நானே
சுய அலசல் செய்ய
சமூகத்தை நான் அறிய
புத்துணர்வு பெற
வெறுப்புக்கள் அகல
பகைமை தீர
மகிழ்ச்சி் மலர
நட்பு நீடிக்க
தனிமையே
வாரோயே நீ
--பன்னீர் செல்வம்
Comments