உலக பால் தினம்

 

உலக பால் தினம்   என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு தினம் ஆகும்


இது பால் பண்ணையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை உணர்ந்து கொள்ள இதே நாளில் பல நாடுகளில் தனிப்பட்ட மற்றும் தேசிய விழாக்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. 


 


இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால். தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் என பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்பும், சத்தும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது. இதை உலகுக்கு உணர்த்த ஐநா சபை ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வந்தது. பால் மற்றும் பால் பொருள்களின் சிறப்பு அம்சங்களை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐநா சபை வலியுறுத்தியது. இந்த ஆண்டுதான் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஒரு புறம், நோய்த் தொற்று அதிகரிப்பு ஒரு புறம், பொருளாதார பாதிப்பு ஒரு புறம், வாழ்வாதாரம் பாதிப்பு ஒரு புறம், வாழ்வாதாரம் இல்லாத நிலையில் தற்கொலைகள் அதிகரிப்பு ஒரு புறம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை ஒரு புறம் போன்று பல  பிரச்னைகளில் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த உலக விழாவையும் கொண்டாட முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.


பசும்பாலில் அனைத்துவித அமினோ அமிலங்களும் உள்ளன. 5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது.   இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


 


உலகின் பல கோடி மக்களுக்கு முழுமையான உணவுப் பொருளாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திரவ உணவாகவும் பால் விளங்குகிறது.


உலகில் பிறந்த எல்லோருமே பாலை பருகியே இருக்கின்றனர்.  விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பவர்கள் கூட தங்களுடைய இளம் வயதில் பால் பருகியே இருப்பர்.


குறைந்த செலவில் ஓர் நாட்டின் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்பவை பாலும் முட்டையும்தான். இந்தியா போன்ற வேளாண் சார்ந்த நாடுகளின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கை நிலையும் பால் உற்பத்தியை சுற்றியே வட்டமடிக்கின்றன.


சர்வதேச பால் சந்தையில் பல ஆண்டுகளாக முதல் நிலை உற்பத்தியாளர் எனும் நிலையை இந்தியா தக்க வைத்து கொண்டிருப்பதற்கு காரணமான வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை தேசிய பால் தினமாக கடைப்பிடித்து வருகிறோம்.


விலங்கு வழி மனிதர்களுக்கு பரவும் நோய்கள் காய்ச்சாமல் பருகும் பாலின் மூலமாகவே பரவுகின்றன. எனவே, பாலினை கொதிக்க வைத்தே பருக வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பால் மற்றும் இதர பால் பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து நோய் உண்டாக்கும் கிருமிகள் கொல்லப்படுவதால் அவற்றை கொதிக்க வைக்காமல் பருகுவதில் தவறில்லை.


ஆட்டுப்பால் மற்றும் கழுதைப்பாலை காய்ச்சாமல் குடிக்கும் பொழுது அந்த விலங்குகள் காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கும் அந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. பால் நமக்கான நல்ல உணவு மட்டுமல்ல நோய்க் கிருமிகளுக்கும் நல்ல ஊடகம் என்பதை இந்நாளில் உணர்ந்து கொள்வோம்









 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,