தொட்டு நடிக்கக்கூடாது...
தொட்டு நடிக்கக்கூடாது...
`கொரோனா ஊரடங்கு’ தொடரும் நிலையில் சீரியல் ஷூட்டிங்கிற்குத் தமிழக அரசு அனுமதியளித்தும், இதுவரை எந்தவொரு சீரியலின் ஷூட்டிங்கும் தொடங்கவில்லை.
ஸ்பாட்டில் 20 பேருக்கு மேல் இருக்கக்கூடாது, இண்டோரில்தான் நடத்தவேண்டும், கேரவனில் ஏசி போடக்கூடாது என்பன போன்ற சில கட்டுப்பாடுகளே ஷூட்டிங் தொடங்காததற்குக் காரணம் என்கிறார்கள்.
``ஒரு சீரியல் தயாராகுதுன்னா சுமார் 100 பேர் வரைக்கும் வேலை கிடைக்கும். இப்ப ஷூட்டிங் நடக்காததால இவங்களுக்கு வேலை இல்லை. அதனால சீக்கிரம் ஷூட்டிங் நடத்தணும்னு கோரிக்கை வச்சிருக்காங்க. ஆனா இப்ப பர்மிஷன் கிடைச்சும் சந்தோஷப்பட முடியலை. எப்படித்தான் ஆட்களைக் குறைச்சாலும் ஒரு சீரியல் ஷூட்டிங்குக்குக் குறைஞ்சது 40 பேர் வரைக்கும் தேவைப்படுவாங்க.
இன்னொரு விஷயம், இன்னைக்கு முக்கால்வாசி சீரியல்கள்ல நடிக்கிற ஆர்ட்டிஸ்டுகள் பெங்களூரு, கேரளான்னு வெளிமாநிலங்கள்ல இருந்து வர்றவங்களா இருக்காங்க. அப்படி வர்றவங்களைச் சென்னை வந்ததும் தனிமைப்படுத்தணும்னு சொல்வாங்களானும் தெரியலை. இந்த ஆர்ட்டிஸ்டுகள்ல எத்தனை பேர் முதல்ல நடிக்கச் சம்மதிப்பாங்கன்னும் தெரியலை. ஹீரோ ஹீரோயின் தொட்டு நடிக்கச் சம்மதிப்பாங்களாங்கிற மாதிரியான விஷயங்கள்லாம் கூட இருக்கு.
தவிர, ஆர்ட்டிஸ்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கணும்னு சொல்லியிருக்கறதா கேள்விப்பட்டேன். இதை சேனலா அல்லது தயாரிப்பாளரா யார் செய்யறதுன்னு தெளிவா சொல்லியிருக்காங்களானும் தெரியலை. ஏன்னா, பெரும்பாலும் இன்னைக்கு funded serials-னு ஆகிட்டதால, தயாரிப்பாளங்கிறவர் வெறும் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்தான். பட்ஜெட்டுக்குள் சீன் எடுத்தாகணும்கிற சூழல்ல இந்த இன்ஷூரன்ஸ் பெரும் சுமையா இருக்கும்.
இப்படி நிறையச் சிக்கல்கள் இருக்கிறதாலதான் அரசு அனுமதி தந்த பிறகும் கூட ஷூட்டிங் தொடங்க முடியாத நிலை’’ என்கிறார் ஒரு சின்னத்திரை தயாரிப்பாளர்
Comments