நம் மக்களை யார் காப்பாற்றுவது

 


                   இன்னொரு சம்பவம், படித்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விளக்குவது.  அதனை நாளை தருகிறேன் என்று எழுதியிருந்தேன்.  அதற்கு முன் நேற்று நடந்த சம்பவத்தில், அந்த கலைஞர்கள்  வாசித்த பாடல்களில் ஒன்று வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை என்று பலே பாண்டியா படத்தில் வரும் பாடல் ஒன்று.  இறந்தவர் வீட்டில் இருக்கும்போது அவர் வீட்டு வாசலில் பாடும் பாடலா இது?  வேறு சில பாடல்களும் இப்படிப்பட்ட பாடல்கள்தான்.  அவர்களை குறை சொல்லமுடியாது.  அவர்கள் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்காதவர்கள்.  ஆகவே, பழைய நினைப்பிலேயே பாடல்களை இசைத்தார்கள்  எந்த சந்தர்ப்பத்தில், எதை இசைக்க வேண்டும் என்று தெரியாமல்.


நேற்று முன்தினம், என் தம்பியுடன் காலை 5.45 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மம்மி டாடி என்ற பிரபலமான கடை வழியாக காரில் சென்று  கொண்டிருந்தோம் அண்ணா நகரிர்ல உள்ள ஒரு கண் மருத்துவ மனைக்குச் சென்று கொண்டிருந்தோம் சிகிச்சைக்காக.   அந்த மம்மி டாடி கடை அமைந்துள்ள சாலையில் பெருங்கூட்டம் வாய்க்கவசம் அணியாமல் பேசிக்கொண்டு மென்னடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள், இதற்கு முன் இந்த தளத்தில் வெளியிட்டுள்ள மெரினா கடற்கரை சாலை மென்னடை பயிற்சி செய்வோர்கள் படத்தில் இருந்ததைப் போல்.  தமிழ்நாட்டிலேயே, சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது என்று அரசே சொல்லிக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில், இவ்வாறு வாய்க்கவசமும் இல்லைமல், சமுதாய விலகலும் இல்லாமல் படித்தவர்கள், பாமரர்கள் போன்ற அனைவரும் சமுதாயப் பொறுப்பும் இல்லாமல், கூட வாழும் மக்களைப் பற்றியும் கவலைப்படாமல், உற்றார், உறவினர் பற்றியும்


கவலைப்படாமல் அரசைப் பற்றியும் கவலைப்படாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் மற்றைய துறையினர் என யாரைப் பற்றியும்   கவலைப்படாமல் நடந்து கொள்கிறார்கள் என்பதை நேரில் பார்க்கும்போது மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.


இதைப் பார்த்த என் தம்பி, சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டான்.  சில பொருள்களை வாங்க ஒரு மிகப் பெரிய கடையினுள் நுழைந்து வரிசையில் நின்றிருக்கிறான் என் தம்பி. அவனுக்கு முன்னால் நின்றவர், அவருக்கு முன்னால் நின்றவரிடமிருந்து இடைவெளி விட்டு நின்று கொண்டிருந்தார்,  இவனுக்குப் பின்னால்  வந்தவரும் அதே போல் இடைவெளி விட்டு நின்று கொண்டிருந்தார்.  அந்த


ஊரைச் சேர்ந்த என்னுடைய தம்பியின் நண்பர், இவனுக்கு செய்கை மூலம் அப்படியே நடந்து கொள் என்று சொல்லியிருக்கிறார்.  இவனும் அந்த நடைமுறையை பின்பற்றியுள்ளான்.  வெளியே வந்தபின், அவனுடைய நண்பர், இங்கு எந்த மாலுக்குச் சென்றாலும் வாங்க வருபவர்கள் இடைவெளி விட்டுதான் நிற்க வேண்டுமென்பது கட்டாயம் என்ற தெரிவித்தார்.   இது எப்போதும் செயல்படுத்தும் நடைமுறை என்றும் குறிப்பிட்டாராம்.  அதனால்தான் கொரனா என்ற கொடிய தொற்று நோய் உலகெங்கும் பரவியபோது கூட சிங்கப்பூர் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாமல் இருந்தது, முதலில்.  ஆனால், மற்றைய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்த்தனால் அங்கும் அந்தத் தொற்று நுழையத் தொடங்கி, பரவியிருக்கிறது. ஆக, நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பாடம் கற்றுக் கொடுத்த நாடு சிங்கப்பூர் என்று தம்பி தன் எண்ணத்தை தெரிவித்து உரையை முடித்தான்.


 


இன்றைய தினம் இரண்டு  செய்திகள் போடப்பட்டுள்ளது,  ஒன்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் எந்தவித நடைமுறையையும் பின்பற்றாமல் நடந்து செல்வது.  மற்றொன்று, புரி கோவிலில், பூசாரிகள் நடந்து கொள்ளும் முறை.


நம் மக்களை யார் காப்பாற்றுவது?



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி