இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் 

இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் 



தமிழ், தெலுங்குமலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களுக்கு இசையமைத்துள்ள  மாமேதை கே.வி. மகாதேவன் நினைவு நாள் இன்று 21-06-2001, மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.


1942 இல்  மனோன்மணி  என்ற  திரைப்படத்துக்கு  முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே  என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.


தமிழ்நாட்டின்  தென்பகுதியில்  நாகர்கோவிலில்  கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர்  திருவனந்தபுரம்  அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர்  கோட்டு வாத்தியம்  இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலேயே   இசையில்  நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை.


பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.


பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து  பம்பாய்  ஐதராபாத்,  தில்லி,  நாக்பூர்  ஆகிய வெளி மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் கச்சேரி செய்து பாராட்டைப்பெற்றார்.


1942 இல் மனோன்மணி  என்ற திரைப்படத்துக்கு டி. ஏ. கல்யாணம் இசையமைத்தபோது கே. வி. மகாதேவன் அவரிடம் உதவியாளராக இருந்தார். அப்போது டி. ஏ. கல்யாணம், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பை மகாதேவனிடம் தந்தார்.


பி. யு. சின்னப்பா பாடிய, கானடா இராகத்திலமைந்த, மோகனாங்க வதனி  என்ற அந்தப் பாடலே மகாதேவன் முதன்முதலில் இசையமைத்த திரைப்படப் பாடலாகும்.


மதன மோகினி உள்ளிட்ட சில திரைப்படங்களில் தன் சொந்தக் குரலில் பாடியுமுள்ளார்.


இவர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்சில


1941 - 1950



  1. மனோன்மணி (1942)

  2. பக்த ஹனுமான் (1944)


1951 - 1960



  1. மதன மோகினி (1953)

  2. நல்லகாலம் (1954)

  3. டவுன் பஸ் (1955)

  4. சம்பூர்ண ராமாயணம் (1956)

  5. முதலாளி (1957)

  6. நல்ல இடத்து சம்பந்தம் (1958)

  7. நீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)

  8. நாலு வேலி நிலம் (1959)

  9. சொல்லுத்தம்பி சொல்லு (1959)

  10. பாஞ்சாலி(1959)

  11. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்(1959)

  12. ஆட வந்த தெய்வம்(1960)

  13. பாவை விளக்கு(1960)

  14. படிக்காத மேதை(1960)

  15. கைதி கண்ணாயிரம்(1960)

  16. எங்கள் செல்வி(1960)

  17. சிவகாமி(1960)

  18. தங்கம் மனசு தங்கம்(1960)

  19. தங்கரத்தினம்(1960)


1961 - 1970



  1. தாய் சொல்லை தட்டாதே (1961)

  2. தாயைக்காத்த தனயன் (1962)

  3. கவிதா (1962)

  4. குடும்பத்தலைவன் (1962)

  5. சாரதா (1962)

  6. வடிவுக்கு வளைகாப்பு (1962)

  7. வளர் பிறை (1962)

  8. மாடப்புறா (1962)

  9. அன்னை இல்லம் (1963)

  10. இருவர் உள்ளம்(1963)

  11. லவகுசா(1963)

  12. வானம்பாடி(1963)

  13. குலமகள் ராதை(1963)

  14. குங்குமம்(1963)

  15. கன்னித்தாய்(1965)

  16. எங்க வீட்டுப் பெண்(1965)

  17. திருவிளையாடல்(1965)

  18. தாலி பாக்கியம்(1966)

  19. சரஸ்வதி சபதம்(1966)

  20. கந்தன் கருணை(1967)

  21. திருமால் பெருமை(1968)

  22. தில்லானா மோகனாம்பாள்(1968)

  23. தெய்வீக உறவு(1968)

  24. எதிரொலி(1970)

  25. விளையாட்டுப் பிள்ளை(1970)


1971 - 1980



  1. வசந்த மாளிகை (1972)

  2. உத்தமன் (1976)

  3. சத்யம் (1976)

  4. ஏணிப்படிகள் (1979)


1980 - 1990



  1. பதில் சொல்வாள் பத்ரகாளி (1986)


அக்கினி புராண மகிமை வெளியான ஆண்டு தெரியவில்லை 


சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)



  • சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, அடிமைப் பெண்)

  • சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம்)

  • சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு) (1992, சுவாதி கிரணம்)

  • கலைமாமணி விருது


கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்  அவரது சங்கீத ஞானத்தையும் சேவையையும் பாராட்டி, அவரை நினைவுகூர்வோம்.


ஒரே பாட்டில் எத்தனை ராகம். வணங்குவோம். திரு K. V. மஹாதேவன்


   


சங்கராபரணம் பட பாடல்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி