தயிர் வடை

தயிர் வடை


09-06-2020


 


                                         தயிர் வடை


தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு -   1 கப்,  சர்க்கரை - 1 தேக்கரண்டி தூள்,    தயிர் -  250 கிராம்
மிளகாய் பொடி,  வறுத்த சீரகம் பொடி,  கருப்பு உப்பு, சீரகம்,  பெருங்காயம்,  கிஸ்மிஸ்,  உப்பு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் -  தேவையான அளவு


புளி சட்னி  -     1/2 தேக்கரண்டி,  கிரீன் சட்னி -     1/2 கப்


 


 



செய்முறை

உளுந்தம் பருப்பை கழுவி 2 மணிநேரம் ஊறவை.   பின் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து வை   தயிரில் கட்டிகள் இல்லாதபடி நன்கு அடித்து வைத்து கொள்.  அதில் சிறிது உப்பு, மற்றும் சர்க்கரை தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள உளுத்தம் மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அப்பொழுதுதான் வடை பஞ்சு போல் நன்றாக வரும். பிறகு அதில் சீரகம் சேர்த்து கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒருபுறம் வை.  ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்  மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடு.

சுட்டு எடுத்த வடையை பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரில் நனை. இப்போது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வடையை 5-10 நிமிடங்கள் ஊற விடவும்.

பத்து நிமிடம் கழித்து வடையை தண்ணீரில் இருந்து எடுத்து பிழிந்து வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

பிறகு அதில் தயிர், கருப்பு உப்பு, சீரகம் பொடி, சிவப்பு மிளகாய் தூள், கிரீன் சட்னி, புளி சட்னி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து பரிமாறவும்.
காராபூந்தி அல்லது ஓமப்பொடி சேர்த்தும் பரிமாறலாம்.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி