காலையில் வயிற்றை காலி செய்து விட்டு  பூண்டை சாப்பிட்டால் பெறக் கூடிய நன்மைகள்

காலையில் வயிற்றை காலி செய்து விட்டு  பூண்டை சாப்பிட்டால் பெறக் கூடிய நன்மைகள்


ஆகஸ்ட் 09, 2020 



 


 


பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது என்பது. அனைவரும் அறிந்ததே. சமைக்கும்போது உணவுகளில் பூண்டு சேர்க்கப்படுவது  நறுமணத்திற்காகவும்,  என்பது அனைத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் தெரிந்ததுதான். குறிப்பாக, அசைவ உணவுப் பிரியர்களுக்கு இது நன்றாக தெரியும். இவை தவிர, பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன என்பதை சிலர்தான் தெரிந்து வைத்திருப்பர். இரவில் படுக்கும் முன் ஒரு பூண்டு சாப்பிடு


இரண்டு பூண்டுகளை காலையில் வெறும் வயிற்றில் அன்றாடம்  பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.


வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத் தும், தாய்ப்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், இரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும்,


இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.


பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.  பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.


இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும். பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந் துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி விடும். தொண்டை சதையை நீக்கும். 


இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும். சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்கள்.


பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.  காது அல்லது பாதங்களில் பூஞ்சை தொற்றுகள் இருந்தால், ஒரு பூண்டை நன்கு அரைத்து, அதன் சாற்றினை அவ்விடத்தில் விடுங்கள். பூஞ்சை தொற்று விரைவில் போய்விடும். இதய குழாயான தமனிகளில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது.


பூண்டு கொண்டு உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண நினைக்கும் முன், மருத்துவரை கலந்தாலோசித்து, அவரது பரிந்துரையின் பேரில் பயன்படுத்துங்கள். ஏனெனில் சிலருக்கு பூண்டு வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
காலையில் காலி  வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு நா. வீராசாமி அவர்கள் அவரது துறை மானியக் கோரிக்கைக்குப் பதில் அளிக்கையில் குறிப்பிட்டு பேசி தன் உரையை முடித்துள்ளார் என்பது சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளைப் படிக்கும் எவரும் அறிந்து கொள்ளலாம்.   









 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி