சீஸ் ஊத்தப்பம்

சீஸ் ஊத்தப்பம்


 


ஆகஸ்ட் 10, 2020


 


தேவையான பொருட்கள் :
அரைப்பதற்கு :


புழுங்கல் அரிசி - 4 கப்,
முழு உளுந்து - 1 கப்,
துவரம் பருப்பு - கால் கப்,
வெந்தயம் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
ஊத்தப்பத்துக்கு :
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
துருவிய சீஸ் - 1 கப்
எண்ணெய் - தேவைக்கு
கேரட் - 3

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்
கேரட், இஞ்சியை துருவிக் கொள்.
 
அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக் கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கேரட் தூவவும்.

கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி