வத்தக் குழம்பு பொடி அவசரத்திற்கு உதவும்
வத்தக் குழம்பு பொடி அவசரத்திற்கு உதவும்
வத்தக் குழம்பு செய்யும்போது தனியாக வறுத்து அரைத்து செய்வதைக் காட்டிலும் இப்படி பொடியை மொத்தமாக அரைத்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தனியா - 1 கப்
சிவப்பு மிளகாய் - 3/4 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரன்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
சீரகம் மற்றும் மஞ்சளை தவிர்த்து மற்ற அனைத்தையும் கடாயில் எண்ணெய் இன்று வறுத்துக்கொள்ளுங்கள். அவற்றை சூடு தனிந்ததும் ஜாரில் போட்டு அதோடு மஞ்சள், சீரகம் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். பொடியாக இருக்க வேண்டும்.
அவ்வளவுதான் வத்தக் குழம்பு பொடி தயார். அதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
Comments