நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்


ஆகஸ்ட் 10, 2020 11:06


 வைட்டமின் சிஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள குரோமியம்ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.



 


வெங்காய சூப்


தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 4,


பூண்டுப் பற்கள் - 4,
பச்சைமிளகாய் - 2,
கெட்டியான தேங்காய்ப்பால் - அரை கப்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,  
நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது - ஒரு டீஸ்பூன்,
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு


உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்.

வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கு.

இதில், மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிடு.

வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வை.

ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு  கொத்தமல்லித்தழையைத் தூவி வெங்காய சூப்பை இறக்கு.









 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,