நதிகள்







 இன்றைய இலக்கிய சோலையில்

நதிகள் கவிதை

 

நதிகள்

 


 

 ஒவ்வொரு துளியும் மண்ணில் விழும்

 

 ஒவ்வொரு உயிரும் பயனைப் பெறும்

 

 பனியே உருகும் மலையில் இருந்து

 

 தன் பணியை செய்யும் நதியாய் வளைந்து

 

 

 கங்கையும் காவிரியும் இணைந்தால் வளம் பெருகும்

 

 காலம் முழுதும் நம் தேசம் தன்னிறைவாய்  மாறும்

 

 வளர்ச்சி என்பது இவ்வழியில் பெரிதாய் அமையும்

 

 வறட்சியென்பது இல்லாத நிலையாய்  முடியும்

 

 

 நீர்வளமொன்றே  அனைத்து தேவைக்கும் ஆதிக்கம்

 

 நீரில்லையென்றால் எல்லா வகையிலும்  பாதிக்கும்

 

 

 இயற்கை தந்த வரத்தினை  செம்மைப்படுத்து 

 

 இப்பூமியில் மேகம் சூழ    செய்வாய் மரம் வளர்த்து

 

 நீர்  உறிஞ்சும் வரை பயிருக்கு திருவிழாக் காலம்

 

 எந்நிலையிலும் பசுமையை ரசிக்கும் காலம்

 

 

 நலம் காண நமக்கு சேவை செய்யும் நதிகள்

 

 நாளும் ஓடுவதால் சிறப்பாக நம் விதிகள். 

 

 


 

 முருக.சண்முகம்,  

 , 

 சென்னை 


 

 



 



 




 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி