பெண்கள் திருமண வயது வரம்பு உயர்த்தப்படும் என்ற பிரதமர் அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்

சென்னை: பெண்கள் திருமண வயது வரம்பு உயர்த்தப்படும் என்ற பிரதமர் அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்



நேற்று (ஆக்ஸ்ட் 15) நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  செங்கோட்டையில் தேசியக்  கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போதுஇந்தியாவில் பெண்களுக்கு திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. இந்தியாவில் 16 முதல் 18 வயதில் திருமணம் செய்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து  குறைபாடு மற்றும் ரத்தசோகை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


 


 


எனவே பெண்கள் திருமணம் செய்வதற்கான சரியான வயது வரம்பை உயர்த்துவதற்கு பரிசீலனை நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு விரைவில் அறிக்கையை  அளிக்கும் எனவும் அதன் அடிப்படையில் பெண்களுக்கான திருமண வயது வரம்பை உயர்த்தி நிர்ணயிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில்பெண்கள் திருமண வயது வரம்பு உயர்த்தப்படும் என்ற பிரதமர் அறிவிப்புக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எம்.பி.கனிமொழிபிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்றுக எனவும் கனிமொழி ட்விட்டரில் கருத்து  தெரிவித்துள்ளார். தற்போதுபெண்களுக்கு திருமண வயது 18 ஆகவும்ஆண்களுக்கு 21 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது
 

   


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி