பள்ளி சத்துணவு சமையலருக்கு பணி நிறைவு பாராட்டு

பள்ளி சத்துணவு சமையலருக்கு பணி நிறைவு பாராட்டு



தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தல்



  தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  சத்துணவு மையத்தில்  பணியாற்றி  பணி நிறைவு பெற்ற சமையல சமையலருக்கு   பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


 


                                              சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக  பணியாற்றி கலைச்செல்வி  என்பவர்  சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார்.  இதை ஒட்டி நடைபெற்ற  பாராட்டு நிகழ்வில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் சமையல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற கலைச்செல்விக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள் .நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் செல்வமீனாள், முத்துலட்சுமி, முத்துமீனாள், கருப்பையா, ஸ்ரீதர் மற்றும்  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தேவகோட்டை ஒன்றிய தலைவர் முத்துசிவம் ஆகியோர் சமையலரின்  பணியை பாராட்டி பேசினார்கள். 


 


                பணி ஓய்வுபெற்ற சமையலர் கலைச்செல்வி ஏற்புரை வழங்கும்போது , இந்த பள்ளிக்கு பணிக்கு வரும்போது எனது குழந்தைகளுக்கு சிறு வயது.இங்கு  பணியில் சேர்ந்துதான் எனக்கு எல்லாமே நன்றாக நடைபெற்றது. இந்த சம்பளம் பெற்றுத்தான் என்னுடைய குழந்தைகளை   படிக்க வைத்தேன். இந்த வேலை எனது வாழ்நாளில்  மிகப்பெரிய உதவியாக  இருந்தது.இந்த பள்ளி நிர்வாகத்தினர், தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்,பள்ளி குழந்தைகள் அனைவரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். மனம் சந்தோஷப்பட்டு இந்தப் பணியை நான் ஏற்று செய்தேன். சிறு குழந்தைகளுக்கு உணவளிக்கும் பொழுது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பணியில் இருந்து  வயது காரணமாக ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும், சந்தோசமாக நான் இந்த பணியை ஆற்றினேன் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேசினார் . பள்ளி குழந்தைகளின் பெற்றோரும் வாழ்த்து தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி சமையல் மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சமையலர் கலைச்செல்விக்கு  தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்கள்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,