ஆணாதிக்கம்

           இன்றைய இலக்கியச்சோலையில்

 

ஆணாதிக்கம் ....

                             

                                  கவிதை     --Veenu


 

ஒரு பெட்டிக்கடையின்

தினசரி நாளிதழ் போலவே

வாசித்து முடிந்ததும்

கிழிக்கப்படுகின்றாள் அவள்

 

பெண்மையின் மேன்மையை

ஆர்ப்பரிக்கும் கைதட்டலுக்கு

இடையே பேசிக்கொண்டிருந்தான்

அவள் கணவன் !

நேற்று வைத்த அடுப்படி இரும்பின் சூடு

இன்னும் அதிகமாய் வலித்தது

அவன் மனைவிக்கு !! ....... ....... .......

 

சேலை உரிந்து களைத்து

தோலை புணர்ந்து ருசிக்கும்

துரியோதனர் கூட்டமின்றும்

எச்சில் பசியோடு கிடக்கிறது !

 

அழகாய் சம உரிமையின்

சப்தம் வானம் எங்கும்

அடிக்கோடிட்டு கேட்கும்

ஆனாலும் அப்பாவி விதவைப்பெண்

இன்னொரு தாலிக்கு தயாராகும் போது

ஆணின் அங்கமெல்லாம்

விஷமாகி வியர்க்கும் !! ......

. ...... .......

வண்டாடும் தாய்மையை

வன்முறையில் துண்டாடி

இப்போதும் அலுவலக சுவர்களில்

அடிக்கப்பட்டிருக்கிறாள் பெண் !

 

அதோ பார் என் கவி மை காயும்

முன்னமே ஆணின் அடுப்படிக்கும்

அந்தப்புர மடிப்புக்கும்

அங்கும் இங்குமாய் ஓடி அலைவதற்கே

வெட்டி வைத்த தலையோடு

ஒரு பெண் சீதன சந்தைக்கு

விற்பனைக்கு தயாராக்கப்படுகின்றாள்!

 

 

--- Veenu

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி