பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி?



குழந்தைகளுக்கு இரவில் கதை சொல்லுங்க


பெண்களும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிப்பது குறைத்து விட்டது. குழந்தைகளிடம் மொபைல் போனை கொடுத்து விட்டு தங்கள் வேலைகளை செய்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். இது முற்றிலும் தவறானது. பண்டைய காலத்தை சிந்தித்து பார்ப்போம். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் நேரத்திலும்  தூங்க வைக்கும் நேரத்திலும் கதைகளை சொல்லித் தருவார்கள். இப்போது அப்படி நடப்பதே இல்லை.

உளவியலாளர்களின் கூற்றுப்படி, படுக்கச் செல்லும் நேரத்தில் குழந்தைகளிடம் கதைகள் சொல்லும்போது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் நல்ல பிணைப்பு உருவாகும் என்கின்றனர். மேலும் இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் பெருகுவதுடன் அதிகமாக சிந்திப்பதற்கும் தூண்டுகிறது. அவர்கள் வளர்ந்தபின் அறிவாளியாகவும், நுண்நோக்கிப் பார்க்கும் திறன் உடையவர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பார்கள்.



கதைகள் வழியே அவர்கள் கற்றல் திறன் அதிகரிப்பதுடன் வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் ஏற்படும். இந்தக் காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை இங்கு பார்ப்போம்.


பேசிப் பழகுங்கள் ஒரு பெற்றோராக, அன்றைய தினம் முழுவதும் நடந்த விஷயங்களை குழந்தையிடம் முதலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.


கதை சொல்லும்போது அவர்கள் என்ன மாதிரியான கதைகளைக் கேட்க விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். பின்னர் அவர்கள் விரும்பும் கதைகளை அழகாக வர்ணித்து சொல்லுங்கள்.

இது உங்கள் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள உதவும். மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு புதிய அனுபவத்தை தர கூடியதாக மாறும்.


முதலில் நீங்கள் சொல்லப் போகும் கதையின் கதாபாத்திரமாக மாற வேண்டும். அப்போது உங்கள் குழந்தை உங்கள் கதைகளை இரசிக்க ஆரம்பிக்கும்.


வெறும் வாசிப்பு கதை சொல்லும்போது குழந்தைகளை போர் அடிக்க செய்யும்.

நீங்கள் இன்வோல்வ்மென்டோடு சொல்லும்போது உங்கள் குழந்தை கேட்பதிலும் கவனம் செலுத்துவதிலும் அதிக அக்கறை எடுக்கும். அவர்கள் உங்கள் கதைகளை இரசிக்கத் ஆரம்பிப்பார்கள். மேலும் அவர்களுக்குத் ஒரு தெளிவான கற்பனை வளரும்.
உங்கள் குழந்தையுடன் வலுவான உறவை ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களுடன் இணக்கமாக இருந்து உங்களையே குழந்தை போல மாற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் நம்பக் கூடிய ஒரு நண்பரைப் போல நடந்து கொள்ளுங்கள்.


இதனால் அவர்கள் தூங்குவதற்கு முன்பு, நீங்கள் சொல்லும் எந்தவொரு கதையையும் ஆழ்ந்து இரசித்து தூங்குவார்கள்.



கதை முடிந்தவுடன் நீங்கள் சொன்ன கதையைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். அதிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டவை என்னவென்று கேளுங்கள். மேலும் கதையைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடுங்கள்.  அப்படி இருந்தால் மட்டுமே அக்கதைகளின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் நேர்மை, பணிவு, தயவு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும். வாசிக்க கற்று கொடுங்கள், கடைசியாக, ஏன் கதையை வாசிக்க வேண்டும் என்று வாசிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். கதைகளில் உள்ள எடுத்துக்காட்டுகள் மூலம், அறிவைப் பெறுவதும், வாசிக்கும் பழக்கத்தின் மூலம் தன்னைப் பயிற்றுவிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குக் எடுத்து கூறுங்கள்.


வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தைரியத்தை அவர்களுக்கு முன்னிலைப்படுத்துங்கள்.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,