அதிக அளவில் பால் குடிக்காதீங்க

 

அதிக அளவில் பால் குடிக்காதீங்க


செப்டம்பர் 18, 2020


 பால் அதிகமாக நீங்கள் குடிப்பவராக இருந்தால்அதனை குறைத்து கொண்டு மாறாகதயிர்மோர்வெண்ணைசீஸ்பன்னீர் போன்று பாலில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.



அதிக அளவில் பால் குடிக்காதீங்க


காலையில் எழுந்தவுடன் பலருடைய காலைபொழுது, ஒரு கிளாஸ் பால் கலந்த டீ, காபி போன்றவற்றில்தான் துவங்குகிறது.

பாலில் கால்சியம், வைட்டமின் பி12, விட்டமின் டி, புரோட்டீன், பொட்டாசியம், மினரல்கள், போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், மக்களின் வாழ்க்கையில் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது.



அதிக அளவில் பால் குடிப்பதால் சிலருக்கு செரிமானப் பிரச்சனை உண்டாகும்.

வாந்தி, குமட்டல், வயிறு மந்தமாக இருப்பது போல் உணர்ந்தால் அதிகம் பால் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். சிலருக்கு, பால் குடிப்பதால் ஒவ்வாமை, சரும அலர்ஜி உண்டாகும். பால் குடிப்பதால் எலும்புகள் உறுதியாகும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே சமயம் அதிக பால் குடிப்பதால் எலும்புகளுக்கு ஆபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாம்.

நாள் ஒன்றுக்கு 2 கிளாஸுக்கு மேல் பால் குடித்தால் ஆண்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் பிரச்சனையும், பெண்களுக்கு சில வகையான புற்றுநோய்களை சந்திப்பார்கள் என்றும் BMJ  நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

எனவே நீங்கள் பால் அதிகமாக குடிப்பவராக இருந்தால், அதனை குறைத்து கொண்டு மாறாக, முடிந்தவரை தயிர், மோர், வெண்ணை, சீஸ், பன்னீர் போன்று பாலில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.









 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,