பேரக்குழந்தைகளுடன் விளையாடுங்கள் மிஸ்டர் ரஜினி
பேரக்குழந்தைகளுடன் விளையாடுங்கள் மிஸ்டர் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்த்து வரும் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் எனவும் கூறி ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
சீமானின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் அவரது ரசிகர்கள் சீமானுக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் நான் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சர் வேட்பாளராக வேறு ஒருவரை தான் அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு சீமான் ஆதரவு அளித்துள்ளார்.
சென்னை அம்பத்துரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் எனவும். புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினிகாந்தால் தாங்கள் சந்திப்பது போன்ற அவச்சொற்களை தாங்க முடியாது என்றும் சீமான் குறிப்பிட்டார்.
நன்றாக புத்தகம் படியுங்கள், இமயமலை செல்லுங்கள், பேரன் பேத்தியுடன் விளையாடுங்கள்., அரசியலுக்கு வந்தால் களத்தில் இறக்கி விட்டவர்களே வசைபாடுவார்கள் என ரஜினி காந்திற்கு சீமான் அறிவுரை வழங்கினார்.
வேறு ஒருவரை முதலமைச்சராக அறிவிப்பேன் என அறிவித்ததில் இருந்து ரஜினியுடனான முரண்பாடு நீங்கி விட்டதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
Comments