கர்மவீரர் காமராஜர்
அக்டோபர் இரண்டாம் நாள்
கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் இன்று:
அவரது நினைவைப் போற்றும் பதிவு இன்று
விருதுநகரில் பிறந்து வித்தகரானவர்
வெள்ளை மனம் கொண்டப் பேரறிவாளர்
தனக்கென வாழா தியாக சீலர்
தரணியில் தரம் கொண்ட உத்தமர்
ஏழைகளும் பள்ளி செல்ல வழி வகுத்தவர்
இலவச மதிய உணவால் பசித் தீர்த்தவர்
எல்லோருக்கும் கல்வியை இலவசமாக்கியவர்
எனக்கென்ற எண்ணமில்லா உயர் தலைவர்
தேசவிடுதலை தொண்டால் உயர்ந்தவர்
தேசத்தந்தை காந்தியின் வழி நின்றவர்
சிறையிலிருக்கும் போதும் நாட்டின் நிலை உணர்ந்தவர்
சிரமங்களை தன்னுள் தாங்கி நின்றவர்
அரியணையில் அமர்ந்த போது நல்லாட்சித் தந்தவர்
அன்புள்ளத்தால் எவரையும் கவர்ந்தவர்
பேச்சாக சொன்னதெல்லாம் செய்து முடித்தவர்
பெருந்தலைவர் இவரேயென பெயரெடுத்தவர்
முருக.சண்முகம்
சென்னை
Comments