தேங்காய் சீனிவாசன்


தேங்காய்_சீனிவாசன் பிறந்த தினம் இன்று..

 



1970-80-களில் படு பிஸியாக இருந்த நடிகரிவர்.



கல் மணம் என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார்.



சென்னையைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு இதே அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் இருந்தவர் அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில்தான் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார்.



பின்னாளில் ஏகப்பட்ட நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடிச்சார்,



இவர் குறித்து கட்டிங் கண்ணையா ஷேர் செஞ்சிருக்கும் ஒரு சுவையான சேதி :



முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா ஆகியோரின் நடிப்பில் 1972ம் ஆண்டு ரிலீஸான படம் காசேதான் கடவுளடா. ஏற்கனவே நாடக வடிவில் மெகா ஹிட் அடிச்சிருந்துது இந்த நாடகம். அதை திரைப்படமாக மாற்ற முடிவு செஞ்சிது ஏ.வி.எம். ஸ்டுடியோ..



அந்தப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமான சாமியார் கதாபாத்திரத்தில் நாகேஷ் உட்பட அனைவரும் விரும்பினர். நாகேஷ் ஏ வி எம் செட்டியார்கிட்டே அன்பு கட்டளையிட்டே சென்றுவிட்டார், இந்த கதாபாத்திரத்தில் நான்தான் நடிப்பேன் என்று.



ஆனா அந்த வாய்ப்பு தேங்காய் சீனிவாசனிடமே சென்றது. அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அனைவரையும் குலுங்கி, குலுங்கி சிரிக்க வைச்சுபுட்டார்.



படம் ரிலீஸாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் முக்கியமாக தேங்காய் சீனிவாசன் நடிப்பு மற்றும் அந்த சாமியார் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டுச்சு.



அப்போ சென்னை ராயப்பேட்டையிலிருந்த பைலட் திரையரங்கில் ஆங்கில படங்கள் மட்டுமே ஸ்கீரின் பண்ணிக் கொண்டிருந்தன. ஆனால் காசேதான் கடவுளடா படம் பைலட் திரையரங்கில் திரையிடப்பட்டது. சென்னை தமிழில் பேசும் அந்த அப்பாசாமி ‘சாமியார்’ கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிச்சிருந்தது.



அம்புட்டு பேரு அதை கொண்டாடினர்.



இதனால் இரவோடு இரவாக ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் பதினாறு அடி நீளத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் சாமியார் வேட கட் அவுட் வைத்தார். இதைப்பார்த்த தேங்காய் சீனிவாசன் ஆனந்த கண்ணீர் வடித்தார். உடனே இயக்குனர் கோபுவை வந்து சந்தித்து மனம் மகிழ்ந்து கண்ணீர் விட்டார்.



அதே சமயம் அந்த படத்தின் கதாநாயகனான முத்துராமன், இயக்குனர் கோபுவிடம், கோபமாக ஆனால் மரியாதையுடன் என்ன சார் அந்த படத்தின் கதாநாயகன் எனக்கு கட் அவுட் வைக்காமல், காமெடியனுக்கு வச்சிருக்கிங்களே, நாம் இத்தனை படங்கள் சேர்ந்து வொர்க் பண்ணியும் இப்படி பண்ணிடிங்களே எனக்கேட்டு, பின் கலங்கினார்.



ஆனா இயக்குனர் கோபு நடந்ததைக் கூறி முத்துராமனை சமாதானப் படுத்தினார்

 

 

நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,