ஐக்கிய நாடுகள் தினம்
ஐக்கிய நாடுகள் தினம் 24 அக்டோபர்
1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது. 

1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.
ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
கொசுறு சேதி :
ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஆகும்.
இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகம் 39 மாடிகளை கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று 3 முக்கியமான கட்டிடங்கள் உள்ளன.
ஐ.நா.சபை சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம், அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான நிறுவனம், மக்கள் தொகை நிதியம் போன்ற சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்ற சர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் டிசம்பர் 10ம்தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்‘தான் ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதிமன்றம் தவிர மற்ற 5 அமைப்புகளும் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகிறது.
நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர்
Comments