இந்தியா, சீனா மற்றும் ரஷியாவில் காற்று "அசுத்தமாக" உள்ளது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷியாவில் காற்று "அசுத்தமாக" உள்ளது என கூறினார்.



டிரம்பின் இந்த கருத்து  பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இது உள்நோக்கம் உள்ளதாக சிலர் கருதுகின்றனர். நட்புநாட்டை அவதூறாக பேசியதாக கூறி உள்ளனர்.கடந்த விவ்வாதத்தின் போதும் அவர் இந்தியாவை அவதூறாக பேசினார்.

 

டிரம்பின் கருத்துகள் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல், இருநாட்டு தலைவர்களுக்கு இடையே உள்ள தோழைமை இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அதே சமயத்தில் உலகத்திலேயே மிகவும் மோசமான காற்று உள்ள நகரம் டெல்லி என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர்.

 

டிரம்ப் கூறியது சீனாவை பொறுத்தவரை முற்றிலும் உண்மையில்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் இது உண்மையாக இருக்கலாம் என்று பலரும் உணர்கின்றனர்.

 

சமீபத்திய வாரங்களில் டெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பதாகவும், இதனால் பலருக்கும் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

 

காற்று மாசுவின் தரம் மிகவும் மோசமாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவை விட 12 மடங்கு டெல்லியில் காற்று மாசு அதிகமாகி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,