நம்பிக்கை மனநல காப்பகம், சென்னை டிஎன் போர்சஸ் நிறுவனம்  சார்பில் உலக மனநல தினத்தை முன்னிட்டு  மாவட்ட முழுவதும்  விழிப்புணர்வு பிரச்சாரம்

திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை மனநல காப்பகம், சென்னை டிஎன் போர்சஸ் நிறுவனம்  சார்பில் உலக மனநல தினத்தை முன்னிட்டு  மாவட்ட முழுவதும்  விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கியது.


வழக்கறிஞர் கதாக. அரசு தாயுமானவன் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி காவல் துணைகண்காணிப்பாளர் பழனிச்சாமி  வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார். டாக்டர் சிவகுமார், மனநல காப்பக இயக்குனர் செளந்தரராஜன் ஆகியோர் மனநலம் குறித்தும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை எப்படி பாதுகாப்பது, பராமரிப்பது என்பது குறித்து விளக்கி பேசினர்.
விழிப்புணர்வு பிரச்சாரத்தில்  மனநலம் பற்றியும் மனநலம் பாதித்தவர்க  கையாள்வது, பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி  வாகன பிரச்சாரம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை பழைய பேருந்து நிலையம்,  திருவாரூர் மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. 
 இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


 


 


 


செய்தியாளர். மு. அமிர்தலிங்கம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி