ஈகீகய்
ஈகீகய்
கீர்த்தனா பிருத்விராஜ் அவர்களின் தொடர்
பகுதி (1)
நம்ம ஊரில் 50 வயதை கடந்தாலே வயதாகிவிட்டது.பாதி வாழ்க்கையை வாழ்ந்து விட்டோம் என்றெல்லாம் பேசுவார்கள்.உண்மையென்னவென்றால் வாழும் வாழ்க்கையில் பாதி மீதி என்று எதுவும் இல்லை.வாழ்க்கையை வாழனும் அவ்வளவு தான்.
அப்படியாக,
நூறாண்டுகளுக்கு மேல் நாமும் வாழலாம்.110 வயதை சாதாரணமாக கடந்து வரலாம்.100 வயதை தாண்டி உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம் அதெப்படி சாத்தியம் என்பதை வாருங்கள் நாம் பார்ப்போம்...
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒக்கினாவா தீவில் தாத்தா பாட்டிகளின் வயதெல்லாம் 100,110 என்று இருப்பதை கண்ட அமெரிக்க இராணுவம் அதிர்ச்சி அடைந்தது.
பெரிய இரகசியம் போல் தெரிகிறது என்றெல்லாம் எண்ணி ஒருவழியாக இறுதியில் அந்த சூத்திரத்தை கண்டைந்தார்கள் அமெரிக்கர்கள்.
அதுதான் "ஈகீகய்"(IKIGAI)
முதலில் ஈகீகய் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம்.ஈ என்பதை உச்சரிக்கும் போது புன்னகைத்து கொண்டே உச்சரிக்க வேண்டுமாம்.நம் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது."Reason Of Being" இருத்தலுக்கான நோக்கம் என்ன என்பதை தெரிந்து வாழ வேண்டும் என்கிறது "ஈகீகய்".
நம்முள் பலர் இல்லை அனைவரும் கடிவாளம் கட்டிய குதிரை போன்று தான் வேலைக்கு போக வேண்டும்.பணம் சம்பாதிக்க வேண்டும்.வேலை பணம் இதை தாண்டி வாழ்க்கையில் நமக்காக சில விஷயங்கள் உண்டு என்பதை மறந்து வேலையில் பிரச்சினை வந்தால் பணக்கஷ்டம் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்று கூட தெரியாமல் வாழும் காலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இவற்றையெல்லாம் தடுப்பதற்கு தான் "ஈகிகய்" அமைந்துள்ளது.ஒரு சிறு வரைபடத்தின் மூலம் ஈகிகய் அழகாக வடிவமைத்துள்ளார்கள்.
நமக்குள் இருக்கும் இகீகயை எப்படி கண்டுபிடிப்பது ?
நான்கு முறைகளில் நமக்குள் இருப்ப இகீகயை கண்டறியலாம்.
1.ஆர்வம்
2.திறமை
3.தேவை
4.குறிக்கோள்
1.ஆர்வம்
உங்களுக்கு எது பிடிக்கும்.பிடிக்குமென்றால் வெறித்தனமாக பிடிக்குது என்று சொல்லுவோம் அல்லவா அப்படி எது உங்களுக்கு பிடிக்கிறது என்பதை நீங்கள் உங்களுக்குள் முதலில் கேட்டுக் கொள்ள வேண்டும்.சிலருக்கு பாட்டு பாடுவது விளையாடுவது ஓவியம் வரைதல் ஏன் பேசுவதற்கு கூட பிடிக்கும்.இப்படி உங்களுக்கு எது பிடிக்குமென்று யோசிக்க வேண்டும்.
அடுத்தப்படியாக உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் நாள்தோறும் செய்து கொண்டுள்ளீர்களா என்று பார்க்க வேண்டும்.
2. திறமை
உங்களுக்கு பிடித்த விஷயங்களில் உங்கள் திறமை எந்தளவிற்கு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். உதாரணமாக சிலருக்கு சமைப்பதற்கு பிடிக்கும் அதுவே அவர்களின் திறமையாக அனைவராலும் பாராட்டப்படுவார் அப்படி உங்கள் திறமை எதில் உள்ளது என்பதை நீங்கள் உள் வாங்க வேண்டும்.
3. தேவை
ஆர்வம் மற்றும் திறமையை வைத்து உங்களால் உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க முடிகிறதா என்று பாருங்கள்.மகிழ்ச்சியுடன் பணத்தையும் சேர்க்க முடிகிறாதா என்று கவனியுங்கள்.மேலே சொன்னது போன்று சமையல் கலையில் வித்தகர் என்றால் கேட்டரிங் சென்டர் ஆரம்பித்து ஆர்வம் திறமை பிடித்த வேலை இப்படி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து செய்யும் போது கூடுதல் மகிழ்ச்சியும் பணம் வந்து கொண்டு தானே இருக்கும்.
4. குறிக்கோள்
இதனால் உலகிற்கு என்ன பயன் என்பதை சிந்தியுங்கள்.இந்த வாழ்க்கையை குடும்பம் என்ற ஒரு வட்டத்திற்குள் அடக்கி விடாதீர்கள்.வாழ்ந்தோம் செத்தோம் என்று இருக்க கூடாது எதாவது சாதிக்கனும் என்பது போல தான் உலகிற்கு என்ன பயன் என்பதை நோக்கி நகர வேண்டும்.
ஜப்பானில் உள்ளவர்களின் ஒவ்வொரு விடியலும் இகீகயை பொன்மொழி போல் தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு தான் விடிகிறது.அதே கேள்வி இரவு படுக்கைக்கு செல்லும் போது கேட்கப்படுகிறது.அவர்கள் எல்லாரும் காலை நான்கு மணிக்கு எழுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.
கண்டிப்பாக வாழ்க்கையின் மீது எவ்வித அழுத்தமும் இல்லாதவர்கள் மட்டுமே இப்படியான வாழ்க்கை வாழ முடியும்.
ஆகவே, அனைவரும் முதலில் வாழ்க்கை மீது கொண்டுள்ள தவறான கண்ணோட்டத்தை நீக்குங்கள்.
அவசரமாக வாழாதீர்கள்.உலகம் போகும் வேகத்திற்கு வாழாதீர்கள்.பொறுமையாக அமைதியாக வாழுங்கள்.
நாள்தோறும் காலையில் உடல் உறுப்புகளின் அசைவுகளுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள்.
யாரும் யாரையும் மாற்றி விட முடியாது என்பதில் உறுதியாக இருங்கள்.
சுற்றி இருப்பவர்களிடம் எப்போதும் புன்னகையோடு அணுகுங்கள்.மற்றவரை குறை கூறும் முன்னர் முதுகை பாருங்கள் என்று சொல்ல மாட்டேன்.யாரையும் ஏன் நாம் குறை கூற வேண்டும்.அது அவரவர் இயல்பு ஏற்றுக் கொள்ள பழகுங்கள்.
நம்முடைய நலனையும் நம்மால் மற்றவரின் நலனையும் எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
ஒரு வாழ்க்கை தான் உள்ளது என்று பேசுபவர்கள் பலரே தங்களுக்காக வாழ மறுக்கிறார்கள்.
வாழ்க்கையை வாழுங்கள்.
"The Japanese Secret Of A Long And Happy Life" என்ற புத்தகத்தை பற்றியும் ஈகீகய் பற்றிய மேலும் சில சுவராஸ்யமான தகவல்களை அடுத்தடுத்த நாட்களில் பார்ப்போம்...!
- கீர்த்தனா பிருத்விராஜ்
Comments