இரண்டாம் மகாத்மா
அக்னி சிறகுகள் முளைத்து
வானத்தை வசப்படுத்தினாய்..
அகிலம் திளைத்து இந்தியன் வசமானது
மதங்களைக்கடந்து மனிதம் விதைத்தாய்
உன் புன்னகையில்
புனிதங்கள் விருட்சமானது
ஏழையாய் பிறந்தாய்
ஏற்றம் கண்டாய்
எளியவனாகவே வாழ்ந்த
எங்கள் இரண்டாம் மகாத்மாவே
மண்ணுக்கும் விண்ணுக்கும்
வெகுதூரமில்லை என்பதை
உன் அக்னி சிறகுகள்தானே
உலகுக்கு உணர்த்தியது.
மனிதங்களை வளர்த்து
மரங்களை வளர்க்கச்சொன்னாய்
கனவு காணுங்கள் என்றாய்
இளைஞர்களுக்கு எழுச்சி புகட்டினாய்
கலாம் என்ற விதை
பேய் கரும்பில் மட்டும் விதைக்கவில்லை
இந்திய தேசமெங்கும்
விதைக்கப்பட்டிருக்கிறது
அவை அக்னிக்குஞ்சுகளாய்
இனி (அனல்)பறக்கும்...
கவிஞர் மஞ்சுளா யுகேஷ்.
Comments